கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேந்திரன் இவரது மனைவி 27 வயதுடைய ஜாய் மெட்டில்டா. இவர் அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அந்த நிறுவனத்திற்கு கர்நாடகா மாநிலத்திலும் கிளைகள் உள்ள நிலையில் அங்கும் நிதி கொடுத்து வசூல் செய்யும் அலுவலகம் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் ஜாய்மெட்டில்டாவுக்கும் கர்நாடகா அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றும் 25 வயதுடைய நாகேஷ் என்ற வாலிபருக்கும் அடிக்கடி அலுவலகம் சார்ந்து தொலைபேசி உரையாடல் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தொலைபேசியில் உரையாடி வந்ததாக சொல்லபடுகிறது.
பின்னர் நாளடைவில் இந்த பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி நாகேஷ் அடிக்கடி கர்நாடகாவில் இருந்து அன்னூர் வந்து தனியார் லாட்ஜில் அறை எடுத்து அங்கு ஜாய்மெட்டில்டாவை வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதனை குறித்து அறிந்த ஜாய்மெட்டில்டாவின் கணவர் லோகேந்திரன் தனது மனைவி மற்றும் நாகேஷை கண்டித்துள்ளார். எனவே இருவரும் நேரில் சந்தித்து தனிமையில் இருப்பதனை தவிர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேந்திரன் இந்திய ஐனநாயக வாலிபர் சங்கத்தின் அன்னூர் ஒன்றிய நிர்வாகிய உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி மதுரையில் நடந்த கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் ஜாய் மெட்டில்டா மற்றும் அவரது ஆறு வயது குழந்தை மற்றும் லோகேந்திரன் பாட்டி மயிலாத்தாள் மட்டும் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஜாய் மெட்டில்டா இந்த தகவலை ஏற்கனவே தனது கள்ளக்காதலன் நாகேஷிடம் கூறி அன்றைய தினம் கர்நாடகாவில் இருந்து நாகேஷ் ஜாய்மெட்டில்டா வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து லோகேந்திரன் அறையில் உல்லாசமாக இருந்த நிலையில் இதனை லோகேந்திரன் பாட்டி மயிலாத்தாள் பார்த்து விட்டார். இதனையடுத்து ஆத்திரமடைந்த அவர் “இப்போவே என் பேரனுக்கு போன் பண்ணி நடந்த எல்லாத்தையும் சொல்லுற உனக்கு கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா” என கூற அதனை தடுத்து ஜாய் மெட்டில்டா மற்றும் அவரது கள்ளக்காதலன் நாகேஷ் இருவரும் சேர்ந்து மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் நாகேஷை பாதுகாப்பாக கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்த ஜாய் மெட்டில்டா தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து மாரடைப்பு ஏற்பட்டு மயிலாத்தாள் உயிரிழந்ததாக தெரிவித்து அதனை அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு வழக்கம் போல் தங்களது கள்ள உறவுவை தொடர்ந்த நிலையில் கள்ள உறவுக்கு இடையூறாக உள்ள கணவரை மூதாட்டியை போல கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நேற்றைய தினம் இரவு லோகேந்திரனை கொல்ல திட்டம் தீட்டி நள்ளிரவில் தனது காதலன் நாகேஷை கர்நாடகாவில் இருந்து வரவழைத்து லோகேந்திரன் உறங்கி கொண்டிருந்த போது இருவரும் சேர்ந்து தலையணையை முகத்தில் வைத்து அமுக்கி லோகேந்திரனை கொலை செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் லோகேந்திரன் விழித்து கொண்டு திமிறி எழுந்த நிலையில் நாகேஷ் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேந்திரன் நடந்த சம்பவம் குறித்து அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் ஏழு மாதங்களுக்கு முன்பு மூதாட்டி மயிலாத்தாள் கொலை செய்த குற்றத்திற்காகவும் லோகேந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.