க்ரைம்

குழந்தை உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து தூக்கி வீசிய கொடூரம்… அதிர்ச்சி வீடியோ வெளியீடு  

சிகரெட்டால் உடல் முழுவதும் சுட்டு சித்திரவதை செய்யப்பட்டு 2 வயது குழந்தை தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சிகரெட்டால் உடல் முழுவதும் சுட்டு சித்திரவதை செய்யப்பட்டு 2 வயது குழந்தை தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதர்நாலா கிராமத்தில் ஒரு பகுதியில் வைக்கோலை குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து குழந்தை ஒன்றின் அழு குரல் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் சிலர் குழந்தையை மீட்ட போது குழந்தையின் உடல் முழுவதும் சூடு வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த அவர்கள் குழந்தையை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே குழந்தையை கொடூரமாக தாக்கி சூடு வைத்தவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பெலகாவியில் ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பதற வைக்கிறது.