Cruise ship crew member arrest 
க்ரைம்

“அவளே என் அறைக்கு வந்தாள்”.. 2 முறை சிறுமியுடன் உடலுறவு! சொகுசு கப்பல் அறையில் வசமாக சிக்கிய ஊழியர்

பின்னர் அன்றிரவு அந்த சிறுமி ரஃபேலின் அறைக்கு வந்து உடலுறவு கொண்டதாக புலனைவர்களிடம் ரஃபேல் தெரிவித்துள்ளார்.

Vinvizhi Leninton

சொகுசு கப்பலில் 38 வயதான கப்பல் உயிர்காப்பாளர் ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியுடன் இரண்டு முறை பாலியல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.எஸ்.சி வேர்ல்ட் அமெரிக்கா என்ற கப்பல் சனிக்கிழமையன்று மியாமி துறைமுகத்திற்குத் திரும்பியபோது, ​​குவாத்தமாலாவைச் சேர்ந்த 38 வயதான ஊழியர் ரஃபேல் கயேடானோ பிளாங்கோ கைது செய்யப்பட்டார் என்றும், அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பல் பயணத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 16 அன்று, 17 வயது பெண் பயணியுடன் தான் தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். பின்னர் அன்றிரவு அந்த சிறுமி ரஃபேலின் அறைக்கு வந்து உடலுறவு கொண்டதாக புலனாய்வாளர்களிடம் ரஃபேல் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் நடந்து மூன்று நாட்கள் கழித்து அந்த சிறுமி மீண்டும் ரஃபேலின் அறைக்கு திரும்பியதாகவும், அவர்கள் மீண்டும் உடலுறவு கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சனிக்கிழமையன்று கப்பல் மியாமிக்குத் திரும்பியபோது ரஃபேல் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதின்ம வயதுப் பெண்ணுடன் உடலுறவு கொண்டதை ரஃபேல் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுவதையடுத்து, சிறுமியுடன் சட்டவிரோத பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ரஃபேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என ஆவணங்கள் சுட்டிக்கட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6,700-க்கும் மேற்பட்ட பயணிகளையும் 2,100 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லக்கூடிய அந்த பிரம்மாண்டமான கப்பல், ஹோண்டுராஸ், மெக்சிகோ மற்றும் பஹாமாஸ் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களுடன் கூடிய தனது கடல் பயணத்திற்காக ஆகஸ்ட் 15 அன்று மியாமியிலிருந்து புறப்பட்டது என்று கூறப்படுகிறது. பணியாளர் ஒருவரின் நடத்தை மீறலையும், கூறப்படும் குற்றச் செயலையும் கண்டறிந்தவுடன், உடனடியாக சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதாக கப்பலின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.