க்ரைம்

“நீ எவன் கூட வேணாலும் போ…” - கள்ளக்காதலனுடன் அறை எடுத்து தங்கிய மனைவி.. கணவனிடம் இருந்து வந்த போன் கால் அடுத்து நடந்த உயிரிழப்பு!

தனது கணவருக்கு தெரியாமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஹரிதாஸ் உடன்...

Mahalakshmi Somasundaram

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தக நல்லூர் கிராமத்தை சேர்ந்த அருள் குமார் என்பவரின் மகன் 26 வயதுடைய ஹரிதாஸ். இவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அப்போது மதுராந்தகம் பகுதியில் உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த கவியரசி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவியரசிக்கு செல்வராஜ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஹரிதாஸ் அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த கவியரசியின் கணவர் செல்வராஜ் காணாது மனைவியை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர் ஹரிதாஸ் உடன் தொடர்ந்து பழகி வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது. இதை அறிந்த ஹரிதாஸ் கவியரசியிடம் “நீ உன் புருஷனை விட்டு வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணி நல்ல பாத்துக்கிறேன்” என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. எனவே கவியரசி தனது கணவருக்கு தெரியாமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு ஹரிதாஸ் உடன் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து திருப்பூருக்கு சென்று திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படும் நிலையில் அதனை தொடர்ந்து இருவரும் சபாநாயகர் தெருவில் உள்ள அப்போலோ லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். கவியரசி ஹரிதாஸுடன் சென்றதை அறிந்த அவரது கணவர் செல்வராஜ் கவியரசிக்கு போன் செய்து “நீ எவன் கூட வேணாலும் போ ஆனா என் பசங்க எனக்கு வேணும்” என கூறியுள்ளார். எனவே கவியரசு தனது குழந்தைகளை முதல் கணவரிடம் ஒப்படைத்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

பின்னர் கவியரசு மீண்டும் வந்து பார்க்கும் போது ஹரிதாஸ் தங்கியிருந்த அறை உள்பக்கம் தாழிடப்பட்ட இருந்த நிலையில் வெகு நேரம் அழைத்து எந்த பதிலும் வராமல் இருந்துள்ளது. எனவே அதிர்ச்சி அடைந்த கவியரசு விடுதியின் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ஹரிதாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹரிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் முதல் கணவரிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வருவதாக சென்ற கவியரசி எங்கு வராமல் போய் விடுவாரோ என்ற மன உளைச்சலில் ஹரிதாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விடுதியில் காதலியுடன் தங்கியிருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.