லிஸி மற்றும் அவரின் தந்தை லிஸி மற்றும் அவரின் தந்தை
க்ரைம்

80-களில் இருந்து 'மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை!' "திருடனால் வெளிவந்த 30 ஆண்டுகால கொடுமை"

4 வயதில் இருந்து தன் சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் நிலை திருடனால் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

Vinvizhi Leninton

தற்போது 49 வயதான லிஸி ஜோன்ஸ், தனது தாய், சகோதரர் மற்றும் தற்போது 70 வயதாகும் தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக் ஆகியோருடன் வாழ்ந்த தனது குழந்தைப் பருவம் பற்றி நீதிபதியிடம் மனதை உலுக்கும் பல சம்பவங்களை கூறியிருந்தார். குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் துன்புற்ற நிலையில், லிஸி-யின் தாய் குடும்பத்தைக் காப்பாற்ற அயராது உழைத்த வேளையில், அவருடைய தந்தை தனியாக இருந்த தன் மகள் லிஸியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். லிஸி சரியாக தனது பதின்பருவத்தின் தொடக்கத்தை அடைந்தபோது, ​​பெத்திக் (தந்தை) அவரை ஏறக்குறைய தினந்தோறும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். லிஸிக்கு 15 வயதாகும் வரை அந்தக் கொடூரமான துன்புறுத்தல் தொடர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக லிஸி தனது துயரத்தை இரகசியமாகவே வைத்தியிருந்தார். ஆனால் 2011-ல், அவர்களது வீட்டில் நடந்த ஒரு திருட்டின் விளைவாக, குழந்தைகளை வன்புணரும் படங்கள் நிரம்பியிருந்த பெத்திக் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து லிஸியின் பெற்றோர் விவாகரத்து செய்தனர்.

ஆபாசப் படங்களை உருவாக்கியது தொடர்பான 17 குற்றச்சாட்டுகளையும், ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளை வைத்திருந்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் பெத்திக் ஒப்புக்கொண்டார். இருப்பினும் அவர் சிறைத் தண்டனையிலிருந்து அப்போது தப்பிவிட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, லிஸி இறுதியாகத் தன் தந்தையால் பல ஆண்டுகளாக அனுபவித்த கொடுமைகளைப் பற்றித் தன் தாயிடம் மனம் திறந்து பேசிய நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்கள் இந்தக் குற்றங்களைப் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது 15 அநாகரிகத் தாக்குதல்கள், மூன்று பாலியல் வன்புணர்வுகள், மற்றும் கடுமையான பாலியல் தாக்குதலை நடத்த முயன்றதாகக் குற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்து மேலும் கூறிய லிஸி, "என் சகோதரன் குழந்தையாக இருந்ததால், அவன் உறங்கச் செல்லும் மாலை நேரங்களில் இந்தத் துன்புறுத்தல் நடைபெறும்" என்று மனமுருகி பேசியுள்ளார்.

கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் அந்தத் துன்புறுத்தல் லிஸிக்கு நடந்துள்ளது. லிஸியின் தந்தை, "உனக்கு இது பிடிக்குதா?" என்று கேட்டு மிக மோசமாக நடந்துள்ளார். லிஸி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் கூட பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அவரின் தந்தை. மேலும், "முன்பெல்லாம் அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இப்படித்தான் செய்வார்கள் என்று நான் நினைத்தேன்" என்று கூறியுள்ளார். இது குறித்து தாயிடம் கூறினால் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டியுள்ளார்.

விளையாட்டாக மற்றவர்களிடம் தன்னை கட்டிப்பிடிப்பதாக காட்டிக்கொள்ளும் லிஸியின் தந்தை, அப்போது கூட லிஸியை பாலியல் வன்கொடுமை செய்துதான் வந்துள்ளார். 80களில் இந்தத் துன்புறுத்தல் தொடங்கியதாகவும், ஆனால் 90களில் தனக்கு 11 வயதாகி மேல்நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கியபோது பாலியல் வன்கொடுமை ஆரம்பித்ததாகவும் லிஸி கூறினார். அப்போதுதான், 2011-ல் லிஸியின் இல்லத்தில் நடந்த திருட்டில், 8,500-க்கும் மேற்பட்ட குழந்தை துஷ்பிரயோகப் படங்கள் அடங்கிய லிஸி தந்தையின் மடிக்கணினி கண்டெடுக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, மடிக்கணினியைத் திருடிய திருடன்தான் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பெத்திக், ஆபாசப் படங்களை உருவாக்கியது தொடர்பான 17 குற்றச்சாட்டுகளையும், ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளை வைத்திருந்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இறுதியாக துன்புறுத்தல் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, தனது 42 வயதில் இறுதியாக தனக்கு நடந்த கொடுமையை தான் தாயிடம் கூறினார். இதனையடுத்து, காவல்துறை உடனடியாக வந்து, அந்த விவகாரம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) கொண்டு செல்லப்பட்டது. பிப்ரவரி 2023-ல், நீதிபதி 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெத்திற்கு விதித்தார். அதில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட உரிமக் காலமும் அடங்கும். லிஸியின் தந்தைக்கு தண்டனை கிடைத்துள்ளது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றாலும் அந்த கொடூர நிகழ்வில் இருந்து இன்று வரை தன்னால் வெளியே வர முடியவில்லை என்று லிஸி கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.