திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடையடைப்பு குறித்து துண்டு பிரசுரம் வழங்கியபோது, இரு வணிகர் சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகிகள் அப்பகுதியில் வரும் 6ம் தேதி கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர்.
அதே பகுதியில் வணிகர் சங்க பேரவையின் நிர்வாகிகள் சிலர், அவ்வாறு கடைஅடைப்பு போராட்டம் எதுவும் இல்லை எனக்கூறி துண்டு பிரசுரங்களை வழங்கி வந்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரைச் சேர்ந்தோரும் படுகாயமடைந்தனர்.