க்ரைம்

ஜிம்மிற்குள் புகுந்த மர்மநபர்களால் நடந்த விபரீதம்...!

Tamil Selvi Selvakumar

சென்னை அடுத்த செங்குன்றத்தில் ஜிம்மிற்குள் புகுந்து மர்ம நபர்களால் இரட்டை கொலை நிகழ்ந்துள்ளது.

செங்குன்றம் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஜிம்மிற்குள் அதிகாலை நேரத்தில் புகுந்த ஆறு மர்ம நபர்கள் உள்ளேயிருந்த விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் அஜய் குமார் என்பவர்களை கண்மூடித்தனமாக வெட்டியதில் விஜய் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஜய் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோயில் திருவிழா தொடர்பான முன் விரோதத்தில் கொலை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் விச்சூர் அஜித், கண்ணம்பாளையம் தமிழ் உள்ளிட்ட நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.