சிவகங்கை | மானாமதுரை அருகே தீயனூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி இவர் தனது கிராமத்தில் இருந்து காலையில் தேநீர் அருந்துவதற்காக மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேநீர் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது வளநாடு கிராமத்தின் அருகே நான்கு வழிச்சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயற்சித்த போது ராமநாதபுரத்திலிருந்து மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படிக்க | தனியார் பள்ளி வேன் டயர் வெடித்து வயலில் கவிழ்ந்து விபத்து
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் இங்கு ஒரு தடுப்பு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ...