mani and varatharajan (namakkal pocso) 
க்ரைம்

“சிறுமிகளின் பிறப்புறுப்பில் இருந்த காயம்” - அடுத்தடுத்து நடந்த பாலியல் அத்துமீறல்கள்.. தெருவில் இறங்கி மக்கள் போராட்டம்!

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு...

Mahalakshmi Somasundaram

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை நேற்று முன்தினம் மாலை ஐஸ் கிரீம் வாங்கி தருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த மணி என்ற கூலி தொழிலாளி ஒருவர் காவல் நிலையம் அருகில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறிய நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மணியை தேடி உள்ளனர்.

இரவு முழுவதும் மணி கிடைக்காத சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மணியை கண்டுபிடித்து சிறுமியின் பெற்றோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மணியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதே போல் குமாரபாளையம் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு வந்த 3.5 வயதுடைய உறவினர் குழந்தை மாலையில் அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாடி விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளது.

அப்போது குழந்தை பிறப்பு உறுப்பில் வலிப்பதாக கூறியதை அடுத்து குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டு பிறப்புறுப்பில் காயம் இருந்ததை உறுதி செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் விசாரித்த பொழுது சந்தேகத்திற்கு இடமான நபரான வரதராஜ் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு திரண்டு கைது செய்து அழைத்து வந்த குற்றவாளியை தாக்க முற்பட்டனர். எனவே காவல் ஆய்வாளர் குற்றவாளையை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் “குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள் தண்டனை நாங்கள் வழங்கிக் கொள்கிறோம்” என்று கூறி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே போலீசார் சமரசம் செய்து உடன்பாடு ஏற்படாததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஆத்திரத்தில் ஒரு தரப்பினர் குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் இன்னொரு தரப்பினர் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில் இரு தரப்பினரிடையே போலீசார் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். நாமக்கல் பகுதியில் ஒரே நாளில் இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.