க்ரைம்

“டிரஸ் இல்லாம வீடியோ கால் வா.. இதுவும் உன் வேலை தான்” - மூர்க்கத்தனமாக வன்புணர்வு செய்த எப்ஸ்டின்.. வலியோடு பகிர்ந்த பிஏ சாரா கெல்லன்!

சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது கூட, ஸ்கைப் வழியாகத் தன்னைத் துன்புறுத்தியதாகவும்

Muthu Lakshmi

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த மாபெரும் ஆவணக் குவியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் உலகப் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது ஜெஃப்ரி எப்ஸ்டீனின் தனிப்பட்ட உதவியாளர் சாரா கெல்லன், பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனால் தான் "கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும்", பாலியல் குற்றங்களுக்காக அவர் சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது கூட, ஸ்கைப் வழியாகத் தன்னைத் துன்புறுத்தியதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் "எந்தெந்த எண்ணங்கள் என்னுடையவை, இல்லை அவருடையவை என்று என்னால் பிரித்தறிய முடியாத அளவுக்கு, அவர் என்னை மிரட்டி, பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தி, ஆதிக்கம் செலுத்தி, என் மனதிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தினார்," என்றும் 46 வயதான கெல்லன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்து கீழ்ப்படிய வேண்டியிருந்த சூழலில் தான் வளர்க்கபட்டதாகக் கூறிய கெல்லன், முதலில் ஒரு உள்ளாடை விளம்பர மாடலாக நடிக்க வாய்ப்புக்கு பரிசீலிக்கிறேன் என்று எப்ஸ்டீன் ஏமாற்றியதகவும், பின் முதன்முதலில் அதற்காக தான் ஆடை களையபட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்கள் ஊதியம் பெறாமல் உழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு முறை எப்ஸ்டீன் தனது பிரைவேட் தீவில் குளிக்கத் தண்ணீர் நிரப்புமாறும் கேட்டுள்ளார். பின்னர், ஆடையைக் களைந்து அவருடன் உள்ளே வருமாறும் கட்டளையிட்டதுடன், இதுவும் உன்னுடைய வேலை என்று உதவியாளர் கெல்லனுக்கு கட்டளையிட்டுள்ளார். 

2001-ல் அவரது உதவியாளராகப் பணியைத் தொடங்கியது குறித்துப் பேசிய கெல்லன், “அவரது பாலியல் வன்கொடுமைக்கு அடிபணிவேன் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது,” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “விடுமுறை நாட்களே இல்லாமல், மாதக்கணக்கில் இடைவிடாமல், 24 மணி நேரமும் பணிபுரிந்ததாகவும் தெரிவித்தார். எப்ஸ்டைனின் பெயர்போன 'லோலிடா எக்ஸ்பிரஸ்' எனப்படும் தனியார் ஜெட் விமானத்திலும், அவரது தனித்தீவான லிட்டில் செயிண்ட் ஜேம்ஸிலும் உட்பட, இந்தத் துன்புறுத்தல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பாம் பீச்சில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியூட்டும் தாக்குதல் குறித்து கெல்லன், “யாரும் கேட்க முடியாத அளவுக்கு இசையை உரக்க ஒலிக்கச் செய்து, என் கழுத்தை நெரித்து, என்னை மூர்க்கத்தனமாக பாலியல் வன்புணர்வு செய்தார்” என்றும் குற்றம் சாட்டினார்.

அதிர்ச்சியூட்டும் வகையில், 2008-ஆம் ஆண்டு ஒரு சிறுமியிடம் பாலியல் தொழிலைத் தூண்டிய குற்றத்திற்காக எப்ஸ்டீன் தனது 18 மாத சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தபோதும், அவரது துஷ்பிரயோகம் தொடர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். "சிறையில் எப்ஸ்டீன் இருந்த போது, ​​"எதிர்பாராத விதமாக" வந்த அந்த அழைப்பு வந்ததாகவும், பாம் பீச் கவுண்டி சிறைச்சாலை கணினியிலிருந்து அவர் எனக்கு ஸ்கைப் மூலம் அழைத்து, கேமரா முன்னிலையில் அவருக்காக ஆடையைக் களையுமாறு கட்டளையிட்டார்" என்ற அதிர்ச்சிகரமான குற்றங்களை முன்வைத்துள்ளார். மேலும் கெல்லனின் முடி வெட்டும் முறை, ஹேர் கலர் என எல்லாவற்றையும் அவரே தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். 

பாலியல் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்த எப்ஸ்டீன் 2019ம் ஆண்டு சிறையில் இறந்த நிலையில் கிடந்தார். மேலும் இது தற்கொலை என தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.