Father Sexual Abuse daughter  
க்ரைம்

“சொந்த மகளையே பலமுறை சீரழித்த தந்தை” - கர்ப்பிணி சிறுமியை பார்த்து தாய் அதிர்ச்சி.. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தொடர்ந்து அவ்வப்போது வீட்டில் யாருமில்லாதபோது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 43 வயது தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி மூன்று பெண்குழந்தைகள் உள்ள நிலையில் இருவர் கல்லூரியிலும் இளைய மகளை பள்ளியிலும் பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி ராமகிருஷ்ணனின் மனைவி அவரது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்ற நிலையில் இரண்டு மகள்களும் அவரது தாயுடன் சென்றுள்ளனர். ஆனால் 15 வயதுடைய இளைய மகள் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதால் வீட்டில் இருந்துள்ளார். அதன் காரணமாக ராமகிருஷ்ணனும் வீட்டில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அன்றிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

court

தொடர்ந்து அவ்வப்போது வீட்டில் யாருமில்லாதபோது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் இது குறித்து அறிந்த அவரது தாய் கணவரின் மீது கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்துறையினர் ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கின் விசாரணை தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்கின் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில், குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து குற்றவாளியான தந்தைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணகுமார் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு இழப்பீட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்