ஈரோடு மாவட்டம், அசோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அதே பகுதியில் மினி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தீபா என்பவருடன் திருமணம் நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். முருகேசனுக்கும் தீபாவிற்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபா முருகேசனுடன் இனிமேல் வாழ முடியாது என முடிவு செய்து முருகேசனை பிரிந்து சென்று அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
தீபா முருகேசனை விட்டு பிரிந்து சென்ற பிறகு, கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட ஜெயசக்தியா என்பவருடன் முருகேசனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் இருவரும் திருமணத்திற்கு பிறகு ஈரோடு சோலார் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். முருகேசனுக்கு ஜெயசக்தியாவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதனால் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையை கோபிச்செட்டி பழையதை சேர்ந்த முருகேசனின் உறவினர் ஒருவர் சமாதானம் செய்து இருவரையும் ஒன்றாக வாழ வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் முருகேசன் மற்றும் ஜெய்சக்தியாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதனை பேசி சரி செய்வதற்காக முருகேசன் தன் மனைவி ஜெயசக்தியாவை அழைத்துக் கொண்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார், கோபிசெட்டிபாளையம் வந்த கணவன் மனைவிக்கும் சிக்னல் அருகே மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் முருகேசன் அருகில் இருந்த கடை ஒன்றில் சென்று கத்தரிக்கோலை எடுத்து தன் மனைவி ஜெயசக்தியை கழுத்து,முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்தியதில் ஜெயசக்தியா படுகாயம் அடைந்துள்ளார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த ஜெயசக்தியாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினருக்கும் இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோபிசெட்டிபாளையம் போலீசார் முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.