சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்யா. இவரது மனைவி ஆதிரா. இவர்களுக்கு ஒருமகளும் ஒரு மகனும் உள்ளனர். ஜான் என்கிற சாணக்கியன் மீது சேலம் மாவட்டம் கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது திருப்பூரில் உள்ள பெரியபாளையத்தில் குடியிருந்து வரும் இவர், தனது மனைவியுடன், அன்னதானப்பட்டியில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பினார்.
ஈரோடு அடுத்த நசியனூர் அருகே வந்த போது இவரது காரின் பின்னால் திடீரென ஒரு கார் மோதியது. இதையடுத்து காரில் இருந்து ஜான் இறங்கிய நிலையில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அவரை வெட்டி சாய்த்தது. மேலும் தடுக்க முயன்ற அவரது மனைவியையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றது. பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக தகவல் அறிந்த போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்த ஜானின் மனைவி ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல் ஜானின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: கூட்டணிக்கு காத்திருக்கும் பாஜக...ஆனால் அதிமுக.,வின் பிளானே வேற...
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதுடன் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில் ஆய்வாளர் ரவி, ஏட்டு லோகநாதன் காயமடைந்தனர். இதனால் சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். தப்பிச்சென்ற மற்ற நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகினற்னர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்