க்ரைம்

“சாதி மாறி காதல் திருமணம்” ஆனாலும் வரதட்சணை தொல்லை..! 5 மாத கர்ப்பிணியை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம்!!!

வீட்டிற்கு வந்த மகேந்தர் தானாக சண்டையிழுத்து சுவாதியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.ர். பின்னர், இரவு 8 மணியளவில்....

Saleth stephi graph

ஹைதராபாத்: கடந்த 2024 -ஆம் ஆண்டு மகேந்தர் சாம்லா ரெட்டி என்ற கேப் டிரைவர் ஸ்வாதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டார் தரப்பினரிடம் இருந்தும் இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

 ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர் .

திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி போத்பால் பகுதியில் குடியேறி தனியாக வாழ்ந்துள்ளனர். ஆரம்பத்தில் நன்றாய் போய்க்கொண்டிருந்த இவர்களின் காதல் வாழ்க்கை நெடுநாள் நீடிக்கவில்லை. திருமணம் ஆன சில மாதங்களிலேயே சாம்லா வரதட்சணை கேட்டு ஸ்வாதியை கொடுமைப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

வரதட்சணை தொல்லை தாங்காமல் ஸ்வாத்தி ஏற்கனவே சாம்லா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் கிராமத்தின் பெரியவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வந்து அனுப்பியுள்ளனர்.

திட்டமிட்ட படுகொலை!

மல்கான்கிரி டிசிபி பி.வி. பத்மஜா கூறுகையில், மகேந்தர் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். அவர் போத்பலில் ஒரு ரம்பத்தை வாங்கி, அதை வீட்டில் மறைத்து வைத்துள்ளார், சரியான வாய்ப்புக்காக காத்திருந்து கடந்த சனிக்கிழமை, காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி மாலை 4.30 மணிக்கு திரும்பி இருக்கிறார்.

வீட்டிற்கு வந்த மகேந்தர் தானாக சண்டையிழுத்து  சுவாதியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.ர். பின்னர், இரவு 8 மணியளவில், அவரது தொலைபேசியிலிருந்து அவரது தாயாருக்கு, "நாங்கள் இரவு உணவு சாப்பிட்டோம்" என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

பின்னர் அவரது உடலை பல பாகங்களாக வெட்டி, மூன்றரை மணி நேரத்தில் முசி ஆற்றில் அவரின் உடலை பாகங்களை கொட்டி உள்ளார்.

தொடர்ந்து அன்று இரவு, மகேந்தர் தனது சகோதரிக்கு போன் செய்து சுவாதியை காணவில்லை என்று கூறினார். இதில் சந்தேகம் அடைந்த அவர், தனது உறவினர் கோவர்தன் ரெட்டியிடம் தகவல் தெரிவித்தார். அவர் மகேந்தரிடம் போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.. ஆரம்பத்தில் தயங்கிய மகேந்தர், இறுதியாக கோவர்தனுடன் உப்பல் காவல் நிலையத்திற்குச் சென்றார். 

காவல் நிலையத்தில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த மகேந்தரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியத்தியதில் மகேந்தர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். உடனடியாக ஒரு போலீஸ் குழு அவரது வீட்டை அடைந்து சோதனை செய்ததில் தலை, காய்,கால்களற்ற ஸ்வாதியின் உடல்  மட்டுமே கிடைத்தது. மீதமுள்ள உடல் பாகங்களை முசியில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் GHMC பணியாளர்கள் முயற்சித்து உடலை மீட்க போராடினர், ஆனாலும் வலுவான நீர் ஓட்டம் மற்றும் கிட்டத்தட்ட 20 அடி ஆழம்  காரணமாக உடல் பாகங்களை மீட்டெடுக்க முடியவில்லை என போலீஸ் தரப்பு கூறியிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.