Mumbai Crime News Mumbai Crime News
க்ரைம்

"காதலி விட்டுசென்றதால் காதலன் செய்த செயல்!" தாய் மற்றும் சகோதரியின் புகைப்படங்களை 'ஆபாசமாக மார்ஃப்' செய்து.. சமூக ஊடகத்தில் பதிவேற்றம்

ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃப் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

Vinvizhi Leninton

மும்பையில் தனது தாய் மற்றும் சகோதரியின் புகைப்படங்களை ஆபாசமான உள்ளடக்கத்துடன் மார்ஃபிங் செய்து, அதை சமூக ஊடகங்களில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பரப்பிய தனது முன்னாள் காதலன் மீது, 25 வயது பெண் ஒருவர் மால்வானி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவதூறு மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது மால்வானி போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக காவல்துறை தகவல். அந்தப் பெண் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடன் மல்வானியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு 2025 மே மாதம், அவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஆரிஃப் என்பவருடன் நட்பு கொண்டுள்ளார். இருவரும் தொடர்ந்து உரையாடிய நிலையில், அவர்களின் நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து, 2026 ஜனவரியில், இருவரும் ஒரு சுற்றுலாவுக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர்.

மேலும், புகார்தாரரின் கூற்றுப்படி, ஆரிஃப் அந்த பெண்ணிடமிருந்து அவரது தாய் மற்றும் சகோதரியின் புகைப்படங்களை எடுத்ததுடன், குடும்பத்தில் உள்ள அனைவரின் தொடர்பு எண்களையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலாவிற்கு பிறகு அவர்கள் மும்பைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், சிறிது காலத்தில் தம்பதியரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படத் தொடங்கின. அதனால் அப்பெண் தனது காதலனை விட்டு பிரிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃப் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். பின்னர், தனது தாய் மற்றும் சகோதரியின் படங்களை ஆபாசமான மார்ஃப் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் என்பதை கண்டறிந்த பெண் காவல்துறையை அணுகி புகாரளித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.