க்ரைம்

“17 வயது சிறுவனுடன் கள்ள தொடர்பில் இருந்த 37 வயது பெண்” - உல்லாசத்தில் இருந்ததை பார்த்த மாமியார்… கண்ணில் மிளகாய் பொடி தூவி கழுத்தை அறுத்த கொடூரம்!

அதற்கு தடையாக இருக்கும் மாமியார் மற்றும் கணவரை கொல்ல திட்டம் தீட்டி இருக்கிறார்..

Mahalakshmi Somasundaram

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள சம்மந்தபுரம் பகுதியை சேர்ந்த நிர்மலா என்பவற்றின் மகன் விஜய். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கவிதா என்ற பெண்ணிற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 14 மற்றும் 15 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் மாமியார் நிர்மலா விவசாயம் பார்த்து வருகிறார். எனவே கவிதா குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பின் வீட்டில் தனியாக இருந்து வந்திருக்கிறார்.

அப்போது கவிதாவிற்கு அதே தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனான ராகவன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அடிக்கடி ராகவன் கவிதா வீட்டிற்கு சென்று வரும் நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. பின்னர் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றி திரிவது அடிக்கடி கவிதா வீட்டில் தனிமையில் இருப்பது என நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றனர். ராகவன் சிறுவன் என்பதால் இவர்களது உறவு குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாமல் இருந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம் போல கவிதாவும் ராகவனும் அவரது வீட்டில் தனிமையில் இருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு சென்ற நிர்மலா இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இருவரையும் கண்டித்து இது குறித்து கவிதாவின் கணவர் விஜயிடம் கூறிய நிலையில் விஜயும் தனது மனைவியை கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் ராகவுடன் பழகுவதை நிறுத்தாமல் தொடர்ந்த கவிதா அதற்கு தடையாக இருக்கும் மாமியார் மற்றும் கணவரை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றனர்.

அதன்படி மாமியார் மற்றும் கணவரை கொல்ல வேண்டும் என தனது காதலனான 17 வயது சிறுவனை வற்புறுத்தி வந்திருக்கிறார். எனவே இருவரும் சேர்ந்து முதலில் மாமியார் நிர்மலாவை கொலை செய்ய நினைத்து நிர்மலா வீட்டில் தனியாக இருந்த போது கையில் கத்தி மற்றும் மிளகாய் பொடியுடன் கவிதா வீட்டிற்கு சென்ற சிறுவன் நிர்மலா முகத்தில் மிளகாய் பொடியை தூவி கத்தியை வைத்து அவரது கழுதை அறுத்திருக்கிறார். அப்போது நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்த நிலையில் கவிதா மற்றும் ராகவன் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து நிர்மலாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த ராகவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தனிப்படை அமைத்து தப்பிச்சென்ற கவிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.