chandrasekaran ith saranya and rajeswari  
க்ரைம்

“உன் பொண்டாட்டிய கொன்னுடு நம்ம வாழலாம்” - பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவர்… கள்ளக் காதலியின் பிளானால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

சரண்யாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கின்றனர்...

Mahalakshmi Somasundaram

தூத்துக்குடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் 33 வயதுடைய ராஜேஸ்வரி. இவர் கடலூரைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சந்திரசேகரன் கடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது சந்திரசேகரனுக்கும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சரண்யா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சரண்யாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி எப்போதும் வெளியில் சுற்றி வந்திருக்கின்றனர். இது குறித்து அறிந்த ராஜேஸ்வரி சந்திரசேகரனிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்திரசேகரன் ராஜேஸ்வரியை அடித்து துன்புறுத்தி வந்திருக்கிறார்.

இதற்கிடையில் மேலும் பல பெண்களுடன் சந்திரசேகர் தொடர்பில் இருப்பது ராஜேஸ்வரிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் தனது மாமியார் மற்றும் மன்னரிடம் தெரிவித்த போது அவர்கள் “அவன் ஆம்பளை அப்படித்தான் இருப்பேன்” என கூறி ராஜேஸ்வரியை திட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சரண்யா சந்திரசேகரனிடம் “உன் பொண்டாட்டி உயிரோட இருந்த நம்ம சந்தோஷமா இருக்க முடியாது நீ அவளை கொன்னுடு” என கூறியுள்ளார்.

இந்த ஆடியோக்களை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி இது குறித்து தனது கணவர் மற்றும் அவரது கள்ள காதலி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்கில் ராஜேஸ்வரியின் கணவர் சந்திரசேகர் அவரது கள்ளக்காதலி சரண்யா மீது வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை மற்றும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் சந்திரசேகரின் பெற்றோர்கள் மற்றும் கள்ளக்காதலி சரண்யா மற்றும் அவரது பெற்றோர்களுக்கு ராஜேஸ்வரி மேல் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.

எனவே வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் “உன்னையும் உன் பிள்ளைகளையும் கொலை பண்ணிடுவோம்” என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் பயந்து போன ராஜேஸ்வரி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் சந்திரசேகரன் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணை கடத்தி வந்து கற்பழித்ததாகவும் தற்போது கைது செய்யப்படுவதற்கு முன்பு சரண்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.