கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷிஜில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு வயது ஆண் குழந்தையுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். குடிபோதைக்கு அடிமையான ஷிஜில் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அவர் மீது திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
குடிபோதைக்கு அடிமையான ஷிஜில் குடித்துவிட்டு பெரும்பாலும் வீட்டிற்கு செல்லாமல் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். எனவே எப்போதாவது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் ஷிஜில் மனைவியை வற்புறுத்தி அவருடன் தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு (ஜன 16) ஆம் தேதி வீட்டிற்கு சென்ற ஷிஜில் மனைவியை தனிமையில் இருக்குமாறு வற்புறுத்தி நிலையில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது ஒரு வயது குழந்தை பசியால் அழுதுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஷிஜில் “கொஞ்ச நேரம் சந்தோசமா இருக்க முடியுதா” என குழந்தையை வயிற்று பகுதியில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் குழந்தை மயக்கம் அடைந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணபிரியா குழந்தையை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.மேலும் குழந்தையின் வயிற்று பகுதியில் இருந்த காயத்தை கவனித்த மருத்துவர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து குழந்தையின் தாய் கிருஷ்ண பிரியாவிடம் விசாரித்த நிலையில் தனிமையில் இருக்கும் போது குழந்தை தொந்தரவு செய்ததால் ஷிஜில் குழந்தையை அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷிஜிலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குழந்தையை பெற்ற தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.