க்ரைம்

திருமணத்துக்கு வற்புறுத்திய 90’ஸ் கிட்-டை கொன்ற தந்தை...

திருமணம் செய்து வைக்க கோரி வற்புறுத்திய மகனை தந்தையே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

செங்கல்பட்டு | மதுராந்தகத்தை அடுத் புளியரணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் என்பவரின் மகன் ஆனந்த். 30 வயதான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஷோ ரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். 

குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் நாள்தோறும் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபடுவது வழக்கம். ஏற்கெனவே ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர் என்ற செய்தி ஊரில் பரவிய நிலையில் இதனால் வேதனையடைந்த தாய் தந்தை செய்வதறியாது தவித்து வந்தனர். 

ஆனந்துக்கு 30 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தி வேறு இருந்துள்ளது. தனக்கு திருமணம் ஆகாததற்கு பெற்றோரே காரணம் என நினைத்த ஆனந்த், வாக்குவாதம் செய்து குடும்பத்தினரை தாக்கியுள்ளார். 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல மதுஅருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ஆனந்த், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை சேகர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ஆனந்தின் கழுத்தில் ஒரே அடி வைத்தார். 

உடனே சுருண்டு விழுந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே மயங்கினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனே கவனித்து ஆனந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆனந்த் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தை கொலை செய்த சேகரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். 

தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் தகராறு செய்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இளைஞர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.