க்ரைம்

“14 வயது மகளை கற்பழித்த தந்தை” - தாய் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமிக்கு நடந்த கொடூரம்… 15 நாட்களில் பலமுறை நடந்த பாலியல் வன்கொடுமை!

மூத்த மகளை எழுப்பி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து பின்னர்...

Mahalakshmi Somasundaram

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெண்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளில் வீட்டில் இருக்கும் ஆண்கள் மற்றும் உறவினர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலை இருக்கிறது, ஆனால் இவ்வாறு பாதுகாப்பு வழங்க வேண்டியவர்களே பெண்களை சீரழிப்பது நாட்டு மக்களிடையே மேலும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இது போலதான் டெல்லியில் பெற்ற மகளை தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பஹர்கஞ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தை கடந்த 15 நாட்களில் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்து புகார் அள்ளித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஹர்கஞ் பகுதியை சேர்ந்த கௌரவ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி 14 வயது மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கௌரவ குமாரின் மனைவி பிஹாரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் கௌரவ தனது இரண்டு மகள்களுடன் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது கடந்த (ஜன 31) ஆம் தேதி இரவு இரண்டு மகள்களுடன் படுத்து உறங்கிய கௌரவ் தனக்கு அருகில் படுத்திருந்த மூத்த மகளை எழுப்பி அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் இதனை தாயிடமோ அல்லது வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என தெரிவித்திருக்கிறார்.

இதனால் பயந்த சிறுமி தனக்கு நடந்தது குறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கௌரவ் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தந்தை செய்யும் டார்ச்சரை தங்கி கொள்ள முடியாத மாணவி அச்சத்துடன் காவல் நிலையத்தில் புகாரளித்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கௌரவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைந்திருக்கிறார். பெற்ற தந்தையே மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.