க்ரைம்

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... வாலிபருக்கு வலைவீசும் போலீசார்...

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

Malaimurasu Seithigal TV

மதுரை திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட குராயூர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார்- முத்துலட்சுமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்த நிலையில், முத்துலட்சுமி குராயூர் பகுதியில் தேனீர் கடை வைத்து இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமி கடைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக செல்ல இருந்ததால் அவரது இரண்டாவது மகள் 15 வயது சிறுமி கடையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கருப்பு என்பவரின் மகன் முருகன் வயது 33 திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, இவர் முத்துலட்சுமியின் கடைக்கு தேநீர் அருந்துவதற்காக வந்துள்ளார். 

இந்த நிலையில் கடையில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர் கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார் சிறுமி அலறியதால் பயந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

தொடர்ந்து பொருட்களை வாங்கிவிட்டு கடைக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். எனவே இதுகுறித்து நேற்று கள்ளிக்குடி காவல் நிலையத்தில் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகனை கைது செய்தனர்.