க்ரைம்

பட்டா கத்தியால் பைனான்சியருக்கு சரமாரியாக வெட்டு...வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு...!

Tamil Selvi Selvakumar

வேளாங்கண்ணியில், பைனான்சியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகர் என்பவர், பைனான்ஸ் தொழிலும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக, முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை:

இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில், நண்பர் ஒருவருடன் மனோகர் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம கும்பல், அலுவலகத்தின் உள்ளே புகுந்து மனோகரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனோகர், இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகள்:

இந்நிலையில் இந்த கொலை தொடர்பான சிசிடிவிகாட்சி, தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வேளாங்கண்ணி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.