புளோரிடாவைச் சேர்ந்த தாய் ஒருவர் ஆத்திரத்தில் தனது குழந்தையை விளையாட்டுத் தொட்டிலில் மூர்க்கத்தனமாகத் தூக்கி எறிந்ததை அடுத்து, அவரது குழந்தை உயிரிழந்துள்ளது. பின்னர், கொஞ்சமும் குற்ற உணர்வு இன்றி பல மணி நேரம் டிக்டாக் வீடியோக்களையும் ஆபாசப் படங்களையும் அந்த தாய் பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஜூன் 29 அன்று இரவு சுமார் 11:40 மணியளவில், லேக்லாந்தில் உள்ள டடியானா நார்மனின் வீட்டில், அன்றைய தினம் முன்னதாக பலமுறை தரையில் அடித்துத் தள்ளப்பட்ட அவரது 6 மாத மகன் ஜெரெமியா பீட்டர்ஸ் சுயநினைவின்றி இருந்ததை போலீசார் கண்டறிந்ததை அடுத்து, குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறைத் தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பின்னர், உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், உயிரிழந்த அவரது மகனைப் பற்றி, காவல்துறை விசாரித்தபோது நார்மன் ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் முரண்பட்ட விளக்கங்களை அளித்துள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஜெரெமியாவின் இடது தொடையில் இருந்த ஒரு தழும்பைத் தவிர, காயங்களுக்கான தெளிவான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அந்தத் தழும்பு, குழந்தையின் தாய் குழந்தையை மிகவும் சூடான குளியல் நீரில் குளிப்பாட்டியதால் ஏற்பட்டது என்று நார்மன் முதலில் காவல்துறையிடம் கூறியதாகத் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்தில் அதிகாரிகள் குழந்தை உயிரிழந்தது பற்றி கேட்டபோது, நார்மன் பால் புட்டியைத் தயாரிக்கச் சென்றபோது ஜெரெமியாவைப் படுக்கையில் படுக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்தபோது, குழந்தை கட்டிலிலிருந்து தரையில் விழுந்திருப்பதைக் கண்டதாக காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், புலனாய்வாளர்கள் அவரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தியபோது, அவரது வாக்குமூலம் மாறியுள்ளது. அப்போது, திருமதி நார்மன், அவரது கணவர் மற்றும் குழந்தை ஆகிய மூவரும் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, அவரோ அல்லது அவரது கணவரோ குழந்தையின் மீது தவறுதலாக உருண்டு விழுந்திருக்கலாம் என்று அவர் கூறியதாக காவல்துறை அதிகாரி டெய்லர் தெரிவித்துள்ளார்.
ஆனால், நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை வேறுவிதமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது. குழந்தையின் தொடையில் காணப்பட்ட காயம் குளிக்க பயன்படுத்திய நீரால் ஏற்பட்டதல்ல என்றும், அது "ஒரு கடுமையான வெப்ப நிகழ்வால்" ஏற்பட்டது என்றும், மேலும் 22 அங்குல உயரமுள்ள கட்டிலிலிருந்து ஒருமுறை கீழே விழுந்ததை விட "கடுமையான" பிற காயங்களையும் குழந்தை பெற்றிருந்தது என்றும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
பின்னர், கைது பிரமாணப் பத்திரத்தின்படி, பிரேதப் பரிசோதனை முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட பிறகு, குழந்தையின் தாய் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அன்று குழந்தை மூன்று முறை கீழே விழுந்ததாகவும், அதில் ஒரு முறை தான் குழந்தையைத் தூக்கி எறிந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். திருமதி நார்மன், ரிமோட் கண்ட்ரோலை எடுக்கும்போது தவறுதலாகத் தன் குழந்தையைத் தரையில் போட்டுவிட்டதாகவும், இதனால் அன்று காலை சுமார் 9 மணியளவில் குழந்தை தலையில் அடிபட்டதாகவும் அவர் காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தை கீழே விழுந்ததும் மருத்துவ உதவியை நாடுவதை விடுத்து, திருமதி நார்மன் தன் கைப்பேசியில் காயத்தின் அறிகுறிகளை ஆராய்ந்து, குழந்தையை வீட்டிலேயே கண்காணிக்க முடிவு செய்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு வயதுக் குழந்தையான ஜெரெமையா தனது ஆடும் தொட்டிலில் ஏறியதால் அது கவிழ்ந்து, அதன் விளைவாக அவன் முகம் குப்புறத் தரையில் விழுந்தான் என்று நார்மன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். பின்னர், பிற்பகல் சுமார் 1 மணியளவில், பொறுமையிழந்த அந்தத் தாய், சில அடி தூரத்திலிருந்து நின்றுகொண்டே ஜெரெமியாவை வேண்டுமென்றே விளையாட்டுத் தொட்டிலுக்குள் தூக்கி எறிந்துள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
"கடைசிச் சம்பவம் நடந்தபோதுதான் அந்தப் பெரிய காயம் அந்த பிஞ்சி குழந்தைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறிய காவல்துறை அதிகாரி டெய்லர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை விளையாட்டுத் தொட்டிலின் மெத்தையிடப்படாத தரையில் விழுந்ததால்தான் குழந்தையின் முதுகிலும் தலையிலும் அடிபட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமதி நார்மன், “குழந்தைக்குக் குளிராக இருக்கிறது,” “குழந்தைக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது,” “குழந்தைக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, இது அவசர நிலையா?” உள்ளிட்ட தொடர்ச்சியான கேள்விகளை கூகிளில் தேடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு குழந்தையின் தாய், மாலை சுமார் 4:20 மணி வரை டிக்டாக் வீடியோக்களைப் பார்ப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், திருமதி நார்மன் 30க்கும் மேற்பட்ட முறை ஆபாச இணையதளங்களைப் பார்வையிட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
"அவர் எங்களை அழைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே குழந்தை இறந்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்," என்று டெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பிரமாணப் பத்திரத்தின்படி, மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள், பார்டர்லைன் ஆளுமைக் கோளாறு ஆகியவற்றின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்சனைகளின் காரணமாகவே அவர் பொய் சொன்னதாக நார்மன் குற்றம் சாட்டியதாகக் கூறப்படுகிறது. நார்மன் மீது கடுமையான குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, மேலும் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றச்சாட்டுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று டெய்லர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.