க்ரைம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.83 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!

Malaimurasu Seithigal TV
திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.83 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயணி ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லவிருந்த மலிண்டோ விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆண் பயணி ஒருவர் தனது உடைக்குள் இந்திய மதிப்பில் ரூபாய் 9,82,560
மதிப்புள்ள இங்கிலாந்து பவுண்ட், சிங்கப்பூர் ரிங்கிட் ஆகிய வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.