க்ரைம்

செல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு

சென்னை சைதாப்பேட்டையில் செல்போன் திருடிய வழக்கில் 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை சைதாப்பேட்டையில் செல்போன் திருடிய வழக்கில் 4 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டை ரெட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், தனது வீட்டின் வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களை கைது நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி, சிறார் சிறையில் அடைத்தனர்.