க்ரைம்

சிறுமியை திருமணம் செய்த மணமகன் உட்பட 4 பேர் கைது

சின்ன காஞ்சிபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த நபர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சின்ன காஞ்சிபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த நபர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஷ்ணு காஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த குமரேசன் கடந்த 13ஆம் தேதி திருமணம் செய்துள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணமகன் குமரேசன் மற்றும் திருமணத்திற்கு உதவியாக இருந்த சிறுமியின் தாயார் உஷா ராணி மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி, வீரராகவன்ஆகியோரை குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.