விழுப்புரம் மாவட்டம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் நௌசத்(48). இவரது நண்பர் வடிவேலு என்பவர் மூலம் சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபதி என்பவர் நௌசத்துக்கு அறிமுகமானார். விழுப்புரத்தில் உள்ள வாகன விற்பனை நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஸ்ரீபதி, நௌசத்-ன் மகன் ஷாருக் என்பவருக்கு மெடிக்கல் சீட் வாங்கி தருவதாகக் கூறி கடந்த வருடம் அக்டோபர் மாதம் முகப்பேர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையைக் காட்டி 3 லட்சம் பெற்றுள்ளார். 8 மாதங்கள் ஆன நிலையில் மெடிக்கல் சீட்-ம் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஸ்ரீபதி ஏமாற்றி வந்துள்ளார்.
இதுகுறித்து நௌசத் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜெ.ஜெ நகர் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஸ்ரீபதி-யை கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் எந்தவித பதட்டமுமின்றி பணம் பெற்றது உண்மைதான், அதை திருப்பித்தர முடியவில்லை என்பதும் உண்மைதான் என ஸ்ரீபதி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.