க்ரைம்

காதல் மனைவி சந்தேகப்பட்டதால் விரக்தி... லைவ் வீடியோ போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்...

முகநூலில் லைவ் வீடியோ போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நபரால் பரபரப்பு

Malaimurasu Seithigal TV

திருப்பூர் அருகே முகநூலில் லைவ் வீடியோ போட்டு விட்டு தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கும்பகோணத்தைச் சேர்ந்த சிலம்ப பயிற்சியாளரான மணிகண்டன் என்பவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த மாலினியை  காதல் திருமணம் செய்துக் கொண்டு திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் கண்ணன் காட்டேஜ் அருகே வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதமாக வறுமையின் காரணமாக சிலரிடம் கடன் வாங்கி குடும்பம் நடத்திவந்துள்ளார். இதனிடையே தான் வாங்கிய கடன் காதல் மனைவிக்கு தெரிந்து விட கூடாது என்பதற்காக தனியே சென்று கடன் கொடுத்தவர்களிடம் செல்போனில் பேசி வந்துள்ளார்.

தன்னுடைய கணவனுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த மாலினி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் மாமியார் வீட்டின் பின்புறம் சென்று முகநூலில் லைவ் வீடியோ போட்டு விட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.  தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.