க்ரைம்

விமானநிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்!  

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாக விமானம் மூலம் கடத்தி கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வணிகப் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு சட்டவிரோதமாக விமானம் மூலம் கடத்தி கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வணிகப் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஷார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்திவரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்படும் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 6 பயணிகளிடம் இருந்து 1 கோடியே 96 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மண்டல மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பினர், சம்பந்தப்பட்ட பயணிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.