மதுரை | திருமலை நகரைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவருக்கும், உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர் ஓ.சந்திரன் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்பாக ரூபாய் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்திற்காக கணவர் சரண்ராஜ்-யை மருத்துவர் சந்திரன் கடத்தி வைத்துள்ளதாக மனைவி வினிதா மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்திருந்தார்.
மேலும் படிக்க | 54 கிலோ கஞ்சா... பத்து வருசம் சிறை தண்டனை..!
இதனைத் தொடர்ந்து, இன்று காலை உசிலம்பட்டியில் வத்தலகுண்டு சாலையில் உள்ள அரசு மருத்துவர் சந்திரனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் கடத்தி வைத்திருந்த சரண்ராஜ் -யை மீட்ட போலிசார், உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வைத்து அரசு மருத்துவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விசாரணைக்காக போலீசார் மதுரை காவல் நிலையத்திற்கு டாக்டர் சந்திரனை அழைத்து சென்றனர். அரசு மருத்துவரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதால் உசிலம்பட்டியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.