க்ரைம்

பாட்டியை கல்லால் அடித்து கொலை செய்த பேரன்.....!!

கள்ளகுறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பேரனே தனது பாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வடமாமந்தூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் சல்மான். இவர் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொலை செய்து ஜாமீனில் வெளிவந்த நிலையில், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த தனது பாட்டியை பின்மண்டையில் ஆலோபிளாக் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகை, செயின் உள்ளிட்டவற்றை திருடி சென்று அருகாமையில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளார். பின்னர் கொலை குறித்த தகவலறிந்து மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மூதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குற்றவாளியான சல்மானை கைது செய்து, கரும்பு தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் தங்க சங்கிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.