க்ரைம்

கிலோ கணக்கில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்கள்...! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்..!

Malaimurasu Seithigal TV

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உப்பிலிபாளையம் அக்ரி காலனி பகுதியில் வட மாநில தொழிலாளி ஒருவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. 

இதை அடுத்து 215 கிலோ பொருட்களை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி கணேஷ்(35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லடம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.