கர்நாடக மாநிலம், நெலமங்கள வஜ்ரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 28 வயதுடைய திலீப். இவர் அதே பகுதியில் ஜிம்மில் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல் எடையை குறைக்க 42 வயதுடைய யோகிதா என்ற பெண் அந்த ஜிம்மில் பயிற்சிக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு திலீப் பயிற்சி கொடுத்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்த நிலையில் திலீப்பிற்கு யோகிதை மீது காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திலீப் யோகிதாவிடம் காதலை தெரிவித்த நிலையில் யோகிதை தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளார். எனவே திலீப் அவரிடம் பழகுவதை நிறுத்தி கொண்ட நிலையில் யோகிதா வழக்கம் போல பேசி பழகி வந்திருக்கிறார். தொடர்ந்து இஒருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் இதனை அறிந்த யோகிதாவின் கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
எனவே போலீசார் யோகிதா மற்றும் திலீப்பை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்த நிலையில் இருவரும் சில மாதங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் மீண்டும் இருவரும் தங்களது திருமணத்திற்கு மீறிய உறவை தொடர்ந்து வந்த நிலையில் யோகிதா அவ்வப்போது திலீப்பிடம் தனது தேவைக்காக பணம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் திலீப் பணத்தை கொடுக்க மறுத்த நிலையில் யோகிதா அவரை மிரட்டி பணம் வாங்க தொடங்கியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திலீப் யோகிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது யோகிதா திலீப்பிடம் அவருக்கு சொந்தமான வீட்டை தனது பெயரில் எழுதி வைக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன வருத்தமடைந்த திலீப் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு யோகிதாவிடம் பேசிய திலீப் மிகுந்த மன வருத்தத்துடன் பேசியதால் சந்தேகமடைந்த யோகிதா திலீப்பின் தங்கையிடம் இதை பற்றி கூறிய நிலையில் அவர் திலீப்பின் அறைக்கு சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்