க்ரைம்

வெறும் 500 ரூபாய்க்காக தலைமுடியை பிடித்து தாக்கிக்கொண்ட சுகாதார பணியாளர்கள்...

Tamil Selvi Selvakumar

பீகாரில் 500 ரூபாய் பணத்துக்காக பெண் சுகாதார பணியாளர்கள் இரண்டு பேர், ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

ஜமூய் மாவட்டத்தில் உள்ள லஷ்மிபூர் ஆரம்ப சுகாதார மையத்தில்  ஊழியராக பணியாற்றி வருபவர் ரிந்து குமாரி. இவருக்கும் அதே மையத்தில் பணி புரியும் ரஞ்சனா என்ற  பணியாளருக்கும் இடையே 500 ரூபாய் பணம் பறிமாற்றம் நடந்துள்ளது.

இந்த கையூட்டு விவகாரத்தில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதனைத்தொடர்ந்து அவர்களின் சண்டையை  தடுக்க வந்த நபரும், சண்டையை தீர்க்க முடியாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.