தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி
க்ரைம்

தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு! பெண் தூக்கிட்டு தற்கொலை - கழிவறையில் அடைத்து வைத்து சித்திரவதை

கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தாய் வீட்டில் இருந்த மனைவியிடம் இருந்த தனது குழந்தையை வாங்கசென்ற நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி.

Vinvizhi Leninton

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தாய் வீட்டில் இருந்த மனைவியிடம் இருந்த தனது குழந்தையை வாங்கசென்ற நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி.

திருவள்ளூர் மாவட்டம் ஜவகர்நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (30). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருவள்ளூர் மாவட்டம் , பெருமாள் செட்டி தெருவை சேர்ந்த லாவண்யா (24) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி தற்போது 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக லாவண்யா, பெருமாள் செட்டி தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த இரண்டு வாரமாக தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு (26ம் தேதி) லாவண்யாவிடம் பேசுவதற்காக கணவர் சுனில் குமார் அவரின் தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுனில் குமார் அவரது மனைவியை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்துமாறும், குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒரு கட்டடத்தில் லாவண்யா கையில் வைத்திருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு செல்ல முயன்றுள்ளார் சுனில் குமார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மிகப்பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் லாவண்யா கதவை சாத்திக்கொண்டு சென்றுள்ளார்.

கணவன் வீட்டு வாசலில் இருக்கும் போதே லாவண்யா மின்விசிறியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நடக்கும் போது லாவண்யாவின் தாயார் வெளியில் சென்றுள்ளார். மீண்டும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, லாவண்யாவின் தாயார் அமுதா இது குறித்து திருவள்ளூர் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, பத்து மாத ஆண் கை குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த லாவண்யாவின் தாய் அமுதா, லாவண்யாவின் கணவர் சுனில் குமார் தனது தம்பியின் மனைவியுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கூறினார். மேலும், 2 சவரன் நகை போட்டும் அது போதாமல் வீட்டிலிருந்து பணம் வாங்கிவரக் கூறியுள்ளார். மேலும் அவரை அடித்து துன்புறுத்தி வீட்டின் கழிவறையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும், லாவண்யாவின் தாயாரிடம், "ஆம்! என் தம்பியின் மனைவியுடன் உறவில் உள்ளேன். உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டுள்ளார் சுனில் குமார். மேலும், இது கொலைதான் என்றும் தற்கொலை இல்லை என்றும் லாவண்யாவின் தயார் கூறியுள்ளார். மேலும், சுனில் குமாரின் தம்பியும் லாவண்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து லாவண்யாவின் பாட்டி, சுனில் குமாரை கைது செய்யவேண்டும் என்றும் காவல்துறை இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். சுனில் குமார் உட்பட அவரின் தாய், தம்பி ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன் பின்பு, தங்கள் மகளுக்கும் 10 மாத குழந்தைக்கும் நியாயம் வேண்டி பெண் வீட்டார் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அளித்த வாக்குறுதியின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.