1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு நீச்சல் குள மதுபான விடுதியில், ஒமைமா 56 வயதான விமானி, பில் நெல்சனைச் சந்தித்தார். ஒமைமா வயதான ஆண்களைத் தேடி அவர் வழக்கமாக மதுபான விடுதிகளுக்குச் சென்று வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஒமைமா மற்றும் பில் நெல்சன் இருவருக்குள்ளும் உடனடியாக ஒரு பிணைப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு இருவரும் சில நாட்களிலேயே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் பின்பு, விரைவிலேயே நிலைமை கொடூரமாக மாறியது. 1991, நவம்பர் 28 அன்று, அவர்களின் திருமணம் நடந்து ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், பில்லின் ஆரஞ்சு பீச் குடியிருப்பில் ஒமைமா இருந்தபோது, BDSM எனும் ஒரு "பாலியல் விளையாட்டின்" ஒரு பகுதியாக, பில் ஒமைமாவைக் கட்டிலில் கட்டிபோட்டுள்ளார். ஒமைமாவின் வாக்குமூலத்தின்படி, அவரின் புதிய கணவர், தன்னைத் தாக்குவதை நிறுத்துமாறு விடுத்த வேண்டுகோள்களைப் புறக்கணித்தபோது, ஒமைமா பயந்துபோனதாக கூறியிருக்கிறார்.
சிறுவயதில் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு ஆளான அவர், தற்போது நடந்த உடலுறவு அவருக்கு மனவேதனையையும் தாங்க முடியாத வலியையும் தந்ததாக அவர் கூறியுள்ளார். அதன் பின்பு ஒமைமா, கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தன் கணவர் பில்லின் தலையில் ஒரு விளக்கால் அடித்து, கத்திரிக்கோலால் குத்தி, இஸ்திரிப்பெட்டியால் கொடுமையாகத் தாக்கியுள்ளார். பிரேதப் பரிசோதனையில் பில்லின் மணிக்கட்டுகளில் இறுக்கிக் கட்டிய தழும்புகள் இருந்தன. கொலை செய்வதற்கு முன்பு ஒமைமா தன் கணவனையும் கட்டிப் போட்டுள்ளார் என்பதை காவலர்களுக்கு உணர்த்தியது. அடுத்த 12 மணி நேரத்தில் ஒமைமா "மயக்க நிலை போன்ற நிலைக்கு" சென்றதாகவும், அந்த நேரத்தில் பில்லின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, தலை மற்றும் கைகள் உட்பட பல்வேறு உடல் பாகங்களை அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்ததாகவும் ஒமைமா தனது உளவியலாளரிடம் கூறினார். மேலும், தன் விருப்பம் இல்லாமல் நடந்த இந்த விசயத்திற்கு, அதாவது இந்த பாலியல் வன்கொடுமைகளுக்குப் பழிவாங்கும் விதமாக, அவர் தன் கணவரின் ஆணுறுப்பையும் சிதைத்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களை அழிப்பதற்காகவே தன் கணவரின் உடலைத் துண்டாக்கியதாக ஒமைமா கூறியுள்ளார். ஒமைமா தனது கணவர் பில்லின் கைரேகைகளை அகற்ற அவரது கைகளைக் கொதிக்க வைத்து, பின்னர் அவரது சதையை, மீதமிருந்த உணவான வான்கோழியுடன் கலந்து, குப்பை அகற்றும் இயந்திரத்தில் வீசியுள்ளார். அந்த குப்பை அகற்றும் இயந்திரம் இரண்டு நாட்களாக இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருந்ததை அக்கம்பக்கத்தினர் கேட்டதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கொடூரமான கொலைக்குப் பிறகு, ஒமைமா தனது கணவரின் சிவப்பு நிற காரை ஓட்டிச் சென்றுள்ளார். அக்காருடைய முன் இருக்கையில் கணவரின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் அடங்கிய கருப்புக் குப்பைப் பைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவலர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு முக்கியமான சான்றுகளாக ஒரு மரக்கத்தியும், ஒரு கசாப்புக் கத்தியும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விசாரணையாளர்கள், அவர்களது வீட்டில் ஒரு சூப் பானையில் மெதுவாகக் கொதித்துக் கொண்டிருந்த மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சதைத்துண்டுகளையும், எண்ணெயில் பொரிக்கும் வாணலியில் மூழ்கடிக்கப்பட்டிருந்த பில்லின் கைகளையும், பதப்படுத்தப்பட்ட அவரது தலை இருந்த ஒரு குளிரூட்டியையும் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர். பாதி உடல்பாகங்களை போலீசாரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர், ஒமைமா தனது மனநல மருத்துவரிடம், பில்லின் விலா எலும்புகளையும், அவரது ஆணுறுப்பையும் சமைத்து, அதன் மீது பார்பிக்யூ சாஸை முழுவதுமாக ஊற்றியதாக ஒப்புக்கொண்டார்.
இந்த நிகழ்விற்குப்பிறகு, ஒமைமாவிற்கு பரோலுக்குத் தகுதி பெற்றிருந்தபோதிலும், சிறைக் காவலர் மீதான தாக்குதல் உட்பட, சிறையில் அவர் வெளிப்படுத்திய வன்முறைச் செயல்களின் காரணமாக இரண்டு முறை அவரது விடுதலை மறுக்கப்பட்டது. தற்போதுவரை அவரின் விடுதலையை பரிசீலனையிலேயே உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.