க்ரைம்

மருத்துவமனையில் கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம்...! பரபரப்பான சிசிடிவி காட்சிகள்..!

திருவாரூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குடிபோதையில் சண்டையிட்டு கத்தியால் குத்திய சிசிடிவி வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திருவாரூர் மாவட்டம் மடவாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவிக்கு விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சுரேஷின் மாமியாருக்கு தொடர்புடைய கண்ணன் (55) என்பவர், குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதை விரும்பாத சுரேஷ், கண்ணனுடன் சண்டையிட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, சண்டை பெரிதாகியுள்ளது. அப்போது சுரேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை குத்தியுள்ளார். 

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த கண்ணனை மீட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கத்தியால் குத்திக் கொள்ளும் சம்பவத்தின் வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.