க்ரைம்

“ரீல்ஸ் மோகத்தில் சிக்கிய மனைவி” - கணவன் செய்த வெறிச்செயல்!

வேலைக்கு செல்லாமல் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருந்ததாக

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹீலியானா பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கணேஷ். இவருக்கு 42 வயதாகும் நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த ரேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

அதே பகுதியில் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ரேகா பணிபுரிந்து வந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் ரேகா வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் எப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் கணேஷிற்கும் ரேகாவிற்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் கடுமையாக சண்டை போட்டு கொண்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளனர். 

இருவரையும் சமாதானம் செய்து உறுதி மொழி பெற்றுக் கொண்டு போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் ரேகா தன்னை மாற்றிக் கொள்ளாமல் ரீலிஸ் மோகத்தில் இருந்துள்ளார். வீட்டு வேலைகளை செய்யாமலும் சில சமயம் பெட்ரோல் பங்கில் வேலைக்கு செல்லாமல் ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ரேகாவின் இந்த செயலால் கணேஷ் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளனர்.

வழக்கம்போல் (ஜூன் 19) தேதி மாலை கட்டிட வேலையை முடித்து விட்டு மது போதையில் கணேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த ரேகா உணவு கூட சமைத்து வைக்காமல் ரீல்ஸ் பார்த்து கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேஷ் இரவு 11 மணியளவில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரேகாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

ரேகாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர். ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த ரேகாவை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்பகுதில் சுற்றி கொண்டிருந்த கணேஷை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கணவனே மனைவியை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ரேகாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரேகாவை கொலை செய்த காரணம் பற்றி கணேஷிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.