க்ரைம்

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற கணவன்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி செல்வராஜ். இவரது மகள்  நந்தினியும்,  பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான  விக்னேஷ் என்பவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.  இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியில் நடைபெற்று வரும் கெங்கையம்மன் திருவிழாவிற்காக குடும்பத்துடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கேயும் வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்,  கணவன் விக்னேஷ் மனைவி நந்தினியை துப்பட்டவால்  இறுக்கி கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் தப்பியோட முயன்ற விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், திருவிழாவிற்காக தாய் வீட்டிற்கு வந்த மனைவியை துப்பட்டாவால் இறுக்கி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது