கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள மகாதேவபுரா பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய மஞ்சுளா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மஞ்சுளா ஊர் காவல் படையில் பணிபுரிந்து வந்த நிலையில் பிரதீப் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான பிரதீப் தனது முழு வருமானத்தையும் வீட்டிற்கு கொடுக்காமல் சூதாட்டத்தில் முதலீடு செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நாளடைவில் சூதாட்டத்திற்கு அடிமையான பிரதீப் அதில் முதலீடு செய்ய பணம் கேட்டு மஞ்சுளாவை தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அப்போது மஞ்சுளா பணம் தர மறுப்பு தெரிவிக்கவே அவரது நடத்தையின் மீது சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். நாளுக்கு நாள் மனைவியின் நடத்தையின் மீதான சந்தேகம் அதிகரித்த நிலையில் மஞ்சுளாவிடம் “இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அப்பா யாருடி” என கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) ஆம் தேதி அன்று மனைவியின் வீட்டிற்கு சென்ற பிரதீப் அவரை வேலை முடிந்து வரும் வரை காத்திருந்து அவரிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கேட்டுள்ளார். அதற்கு மஞ்சுளா மறுத்த நிலையில் அவரது காலில் விழுந்து “நான் செய்தது தவறுதான்.. என்னை மன்னித்துவிடு” என கூறியுள்ளார். ஆனால் அப்போதும் மஞ்சுளா மறுப்பு தெரிவிக்கவே அவரை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக 20 முறை குழந்தைகளின் கண் முன்னே குத்தி கொலை செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளாவின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவிடும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதீப்பை கைது செய்ய முயற்சித்த போது, அவர் மனைவியை குத்திய அதே கத்தியால் தன்னை குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். ஆனால் அவரது கையில் இருந்த கத்தியை பறித்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்பே திட்டமிட்டு மனைவியை கொலை கத்தியை எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் மஞ்சுளா வீட்டிற்கு வருவதற்கு முன் பிரதீப் தனது செல்போனில் “சூதாட்டத்தால் என் வாழ்க்கை நாசமாகி விட்டது என் மனைவியும் பிரிந்து சென்றுவிட்டாள்.. இன்று அவளை சேர்ந்து வாழ அழைக்க போகிறேன் மறுத்தால் அங்கேயே அவளைக் கொன்று விடுவேன்” என பேசி ரெக்கார்ட் செய்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.