க்ரைம்

மோசடி நிறுவனங்கள் தொடர்பான புகார்கள் மீது அலட்சியம்...  தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் சஸ்பெண்ட்... 

கோவை மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம்,மோசடி நிறுவனங்கள் மீதுகொடுத்த புகார் மீது மிகவும் கால் தாமதமாக வழக்கு பதிவு செய்ததால் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி நடவடிக்கை.

Malaimurasu Seithigal TV

கோவை மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளராக இருப்பவர் கலையரசி இவர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்தபோது பல்வேறு நிறுவனங்கள் மீது ஏராளமான பொதுமக்கள் மோசடி புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட  மோசடி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய காலம் தாழ்த்துவதாக  அப்போது மேற்கு மண்டல காவல் துறை துணை தலைவர் முத்துச்சாமிக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்தது.இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
அதன்பேரில் பாதிக்கப்பட்ட மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்த விசாரணை அறிக்கையை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமியிடம்  அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

அதில் ஆய்வாளர் கலையரசி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்தபோது மோசடி நிறுவனங்கள் மீது பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மிகவும் கால தாமதமாகவே வழக்கு பதிவு செய்ததும்,சில நிறுவனங்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததாகவும் குறிபிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து போலீசார் அளித்த அறிக்கையின் படி முறையாக பணி செய்யாமல் இருந்த கலையரசியை  முத்துச்சாமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆய்வாளர் கலையரசி சமீபத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சான்றிதழ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.