தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (எ) சக்தி (42). இவருக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணமாகி சுமார் 13 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 11 வயதில் மகன், 10 வயதில் மகளும் உள்ளனர். சக்தி ஒகேனக்கல்லில் வீடு வாடகைக்கு எடுத்து டீ கடை வைத்து தொழில் செய்து வந்தார். அப்போதிலிருந்தே சக்திக்கும், அவரது மனைவி அனிதாவிற்கும் குடும்ப பிரச்னையால் கருத்து வேறுபாடு இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த தவெக ஒன்றிய மேற்கு செயலாளர் அ. கார்த்திக்கிற்கும் அனிதாவுக்கும் 2 வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. குடுபத்தினர் கார்த்திக்கை அழைத்து பேசி இந்த உறவை முறித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் இவர்கள் இருவரும் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அனிதா தனது கணவர் சக்தியை, “நான் இருக்கும் வீட்டிற்கு வர கூடாது” என்று சண்டை போட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சக்தி ஒரு மாதமாக தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விரக்தியில் இருந்தவர், கடந்த 5ம் தேதி மீண்டும் சேர்ந்து வாழ அழைத்த போது அனிதா வர மறுத்துள்ளார். “சக்தியுடன் வாழ முடியாது.. அவர் கட்டிய தாலியும், மெட்டியையும் கழட்டி வைத்துள்ளேன்.. வாங்கி செல்லுங்கள்” என்றும் “குழந்தைகளை பார்க்க முடியாது வீட்டு பக்கம் வரக்கூடாது” என்று கூறி சண்டை போட்டுள்ளார். அதனால் மன விரக்தியில் இருந்து வந்த சக்தி கடந்த 6ம் தேதி பூதிப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த நிலையில் தனது மகன் தற்கொலைக்கு மருமகள் அனிதா மற்றும் அவருடன் தொடர்பில் உள்ள தவெக மேற்கு ஒன்றிய செயலாலர் கார்த்தி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அப்போது மனு கொடுக்க வந்தவர்களில் ஒரு பெண் பையில் மண்ணெண்ணெயை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். அந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் சோதனை செய்து பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணை விரைந்து முடித்து உரிய நடவடிக்கை வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவியின் தகாத உறவால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நடவடிக்கை கோரி மனு அழுகை வந்த பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் எஸ்பி அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்