க்ரைம்

 உயர் நீதிமன்றத்தில், பாதுகாக்கப்பட வேண்டிய வழக்கு ஆவணங்கள் திருட்டு!!

Malaimurasu Seithigal TV

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முக்கிய வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தில் வழக்கின் ஆவணங்களை பாதுகாக்க கூடிய அறையில் இருந்து வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமால் போனதாக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிமன்ற ஊழியர் ஜான்சன் உட்பட பாலமுருகன் பிரித்திவிராஜ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் சிறையில் அடைத்துள்ளனர் காவலர்கள்.