க்ரைம்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது!! கோவையில் பரபரப்பு

கோவையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த  மளிகை கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.  

Tamil Selvi Selvakumar

கோவை மாவட்டம்  ஜி.என்.மில்ஸ் பகுதி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

அவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேரில் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், கடையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ குட்கா பொருளை கண்டுபிடித்த போலீசார் அமிர்தலிங்கத்தை கைது செய்து, போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.