uttar pradesh murder news Admin
க்ரைம்

இப்படி ஒரு சாவு யாருக்கும் வர கூடாது...32 இடங்களில் screwdriver -ரால் குத்தி கொல்லப்பட்ட காதலி..!!

ரபி தொடர்ந்து சாயிராவை தொந்தரவு செய்துள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு செல்வது, அவரை தொடர்ந்து காதலிக்க சொல்லி தொல்லை செய்வது...

Mahalakshmi Somasundaram

உத்தரபிரதேசம் மாநிலம் மொரகபத் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான இளம் பெண் சாயிரா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து கொண்டிருந்த சாயிராவிற்கும் அதே பகுதியை சேர்ந்த ரபி என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் ரபி போதை பொருட்களுக்கு அடிமையாக ஆரம்பித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகமான ரபியின் போதை பழக்கம் ஒரு கட்டத்தில் காதலி வீட்டிற்கு சென்று அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்யும் நிலைமைக்கு ஆளாகியுள்ளது. இதனால் கோபமடைந்த சாயிரா ரபியிடம் காதலிப்பதை நிறுத்திக் கொள்வோம் என கூறி விலகிக்கொள்ள தொடங்கியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த ரபி தொடர்ந்து சாயிராவை தொந்தரவு செய்துள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு செல்வது, அவரை தொடர்ந்து காதலிக்க சொல்லி தொல்லை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார்.. ஒரு கட்டத்திற்கு பிறகு ரபி சாயிராவை “நான் சொல்வதை கேட்கவில்லை என்றல் உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்” இதற்கு பயந்த சாயிரா ரபி சொல்வது போல நடந்துகொண்டுள்ளார்.

சம்பவத்தன்று சாயிராவிற்கு போன் செய்த ரபி வீட்டை விட்டு வெளியில் வர சொல்லி அழைத்துள்ளார். அதன் படி வீட்டில் வயலுக்கு செல்வதாக சொல்லி விட்டு ரபியை சந்தித்துள்ளார் சாயிரா. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கையில் வைத்திருந்த screwdriver யை பயன்படுத்தி சாயிராவின் பிறப்பு உறுப்பு உட்பட 32 இடங்களில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார் ரபி.

பின்னர் அப்பகுதி மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த சாயிராவை பார்த்து இது குறித்து போலீசில் தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாயிராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பி சென்ற ரபியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 20 வயது இளம் பெண் மோசமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.