பல்லடம் அடுத்த கெம்பெ நகர் அருகே சாலையோரத்தில் இருந்த சிறுவர்களிடம் குடிபோதையில் இருந்த ஆசாமி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக சென்ற பிரவீன் ராஜா என்ற கல்லூரி மாணவர் அந்த ஆசாமியை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தான் வைத்திருந்த கத்தியால் கல்லூரி மாணவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
மேலும் அவரை தடுக்க முயன்ற பிரவின் என்ற சிறுவனையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரவீன் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள போதை ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.