க்ரைம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குமா இந்த நிலைமை... தஞ்சை அருகே  வாலிபர் கைது...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முதியவர் காட்டுப்பகுதியில் தனியாக வீடு கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். இவருடைய மூத்த மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அந்த பெண் தந்தையுடன் அங்குள்ள வனப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்று வருவார்.

இந்நிலையில் நேற்று தந்தை இல்லாமல் அந்த பெண் மட்டும் மாடு மேய்க்க சென்ற போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார் அப்பெண் கூச்சலிட்டதும், அங்கு வந்த பொதுமக்கள் அப்பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தையின் புகாரின் பேரில் கோவிந்தராஜனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்பெண் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.