Judge mother deth  
க்ரைம்

கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நீதிபதியின் தாயார்! கொலையா? தற்கொலையா? என போலீசார் விசராணை..!.

தயார் ஜோதியை காணவில்லை என்பதால், காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் ....

மாலை முரசு செய்தி குழு

திருச்சி மாவட்டம் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளவர் அருணாச்சலம். வயது (27).  இவரது தந்தை சுரேஷ் (50) தாயார் ஜோதி (47) நீதிபதியின் தாயாருக்கு இடுப்பு அருகே அறுவை சிகிச்சை செய்துள்ளனர் , மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் கடுமையான வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தயார் ஜோதியை காணவில்லை என்பதால், காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் தேடி வந்தனர் .

இந்த நிலையில் இன்று காலை கீழவாலாடி அருகே உள்ள சிவன் கோவில் குளத்தில் நீதிபதி அருணாச்சலத்தில் தாயார் ஜோதி சடலமாக மீட்கப்பட்டார் .

லால்குடி போலீசார் ஜோதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது கொலையா ? தற்கொலையா? அல்லது குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா?  என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிபதியின் தாயார் கோவில் குளத்தில் சடலமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.