Honour killing in dingugal  
க்ரைம்

“கல்யாணம் ஆகி 4 மாசம் தான் ஆகுது..” பாலத்துக்கு அடியில் பிணமாய் கிடந்த வாலிபர்..! தலைவிரித்தாடும் 'ஆணவப்படுகொலை’..!

ஐ.டி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டு அதன் சுவடு கூட இன்னும் ஆறாத நிலையில் அதற்குள் மீண்டும் ஒரு....

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் நாளுக்கு நாள் சாதி ரீதியான வன்கொடுமைகளும், ஆணவக்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. நாட்டையே உலுக்கிய ஐ.டி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டு அதன் சுவடு கூட இன்னும் ஆறாத நிலையில் அதற்குள் மீண்டும் ஒரு வாலிபர் தனது மாமனாராலே வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, ராமநாயக்கன் பட்டி காலனியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகன் இராமச்சந்திரன், இவருக்கு இரு சகோதரிகள் உள்ளனர். பால் வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் என்பதால் பெண்ணின் தந்தை சந்திரன் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வத்தலகுண்டு போலீசார் இருவரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். 

அதில், இருவரும் மேஜர் என்பதால், பெண்ணை கணவருடனே அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே “என் மகளை அநியாயமா பிரிச்சிட்டல்ல… உன்ன சும்மா விட மாட்டேன்” என சந்திரன் மிரட்டியுள்ளார்.

ஆனாலும் மருக்களை எப்படி கொல்லுவார் என ராமச்சந்திரனின் பெற்றோர் நினைத்துவிட்டனர். ஆனால் நேற்று மாலை 4 மணிக்கு வழக்கம் போல பால் குளிப்பட்டியில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு பால்  கறக்க சென்றுள்ளார், ஆனால் 5 மணிக்கு ராமச்சந்திரன் பாலத்தின் அடியே தலை, கழுத்து, முகங்களின் மோசமான வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
உடனே அவர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்

மகனின் மரணத்திற்கு காரணம் சாதி வெறிபிடித்த சந்திரன் தான், அவர் கைதாகும் வரையில் உடலைப்பெற மாட்டோம் என உறவினர்கள் சொல்லி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.