க்ரைம்

“சாக்கு மூட்டையில் இருந்த இரண்டு தலைகள்” - கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி.. இருவரையும் வெட்டி தலைகளுடன் பயணித்த கணவன்!

ஆத்திரம் அடைந்த கொளஞ்சி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து லட்சுமி மற்றும் தங்கராசுவை வெட்டி தலையை தனியாக துண்டித்துள்ளார்.

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம், மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி, இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கொளஞ்சியின் மனைவி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளை கொளஞ்சியிடம் விட்டு விட்டு பிரிந்து சென்று உள்ளார். பின்னர் கொளஞ்சி பக்கத்துக்கு ஊரை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். கொளஞ்சிக்கும் லட்சுமிக்கும் மூன்று பெண்குழந்தைகள் பிறந்த நிலையில் ஆறு குழந்தைகளுடன் கொளஞ்சி மற்றும் லட்சுமி குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் லட்சுமிக்கு அதே ஊரைச் சேர்ந்த கந்தன் என்பவற்றின் மகன் தங்கராசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. தங்கராசுவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என மொத்தம் நான்கு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உறவை பற்றி அக்கம் பக்கத்தினர் கொளஞ்சியிடம் தெரிவித்த நிலையில் மனைவியின் மீது சந்தேகம் அடைந்த கொளஞ்சி நேற்று முன்தினம் (செப் 10) ஆம் தேதி மாலை தனது மனைவி லட்சுமி இடம் வெளியூர் சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார்.

மீண்டும் கொளஞ்சி நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கொளஞ்சியின் வீட்டு மாடியில் தங்கராசுவும் லட்சுமியும் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கொளஞ்சி இது குறித்து லட்சுமியிடம் விசாரித்துள்ளார். அதற்கு லட்சுமி மற்றும் தங்கராசு கொளஞ்சியை தகாத வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கொளஞ்சி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து லட்சுமி மற்றும் தங்கராசுவை வெட்டி தலையை தனியாக துண்டித்துள்ளார். பின்னர் இருவரின் உடலையும் வீட்டில் போட்டு விட்டு தலைகளை சாக்கு பையில் போட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தலைகள் உள்ள சாக்கு பையை எடுத்து கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து பேருந்து மூலம் வேலூர் சென்று வேலூர் மத்திய சிறைக்கு வந்து தன்னை சிறையில் அடைக்கும்படி அங்கிருந்த பாதுகாவலரிடம் கேட்டுள்ளார். பாதுகாவலர் அவரை அமர வைத்து ஜெயில் வாடனுக்கு கொளஞ்சி குறித்து தகவல் தெரிவித்துள்ளார் ஜெயில் வாடன் உடனடியாக பாகாயம் காவல் நிலையத்திற்கும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீசார் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் வரும் வரை இரண்டு தலைகள் மற்றும் கொளஞ்சியையும் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் கள்ளக்குறிச்சியில் இருந்து ஆய்வாளர் மலர்விழி வேலூர் மத்திய சிறைக்கு வந்து கொளஞ்சி எவ்வாறு அந்த தலையை கொண்டு வந்தார் என்கின்ற ஒத்திகையை செய்து காண்பிக்க சொல்லி அதன் அடிப்படையில் தற்போது கொளஞ்சியை கள்ளக்குறிச்சி கொண்டு செல்கின்றனர்.

இரண்டு தலைகளை ஒரே சாக்கு மூட்டையில் போட்டு கள்ளக்குறிச்சியில் இருந்து பேருந்து மூலம் வேலூருக்கு வந்த கொளஞ்சியை வழியில் யாராவது பார்த்தார்களா? எப்படி அந்த தலையை மறைத்து எடுத்து வந்தார்? என்கின்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர் இரண்டு தலையுடன் நேரடியாக சிறைச்சாலைக்கு வந்த இச்சம்பவம் வேலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.